ஆலடிப்பட்டியில் ஆலயம் கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாகும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் சிவாலயங்களுக்கு நிகராக கம்பீரமாக காட்சி கொடுக்கும் இத்திருக்கோவிலானது ஆலங்குளம் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் சித்தர் பெருமானால் உருவாக்கப்பட்டது.

 

வேண்டியவர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருளும், தீராத நோய்களையும் தீர்த்தருளும், நவநிதிகளையும் வரையறாது வழங்கி வரும் எம்பெருமான் அருள்மிகு வைத்தியலிங்க சுவாமியும், மங்கையரின் மஞ்சள் குங்குமத்திற்கும் காவலாய் மங்கையர் வளம் கொழிக்க கோவில் கொண்டு அருள்பாலிக்கும் அன்னை யோகாம்பிகையின் அருள் பெற அனைவரையும் வரவேற்கிறோம்.